Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


பத்தாயிரம் கோடி ரூபாவரை வரி அறவிடவில்லை


2021-10-07 14906

 


நுரைச்சோலை அனல் மின்நிலைய கேள்விமனு 13 கோடி ரூபா நட்டம்

 

 

தேசிய வருமான வரித்திணைக்களம் தமது “லெஜசி” மற்றும் “ரமிஸ்” ஆகிய இரண்டின் ஊடாக 2021ஆம் ஆண்டில் அரச நிறுவனம் பலவற்றிலிருந்தும் பத்தாயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிலுவை வரி செலுத்தல் காணப்படுவதாகவும் அதனூடாக அறவிடப்பட வேண்டிய வரிவருமானம் நானூற்று நாற்பத்திரண்டு கோடி ரூபாவாகும் என்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அரச வருமான அறிக்கை தொடர்பான தெரிவுக்குழுவிலன் அறிக்கையின்படி நேற்று புதன்கிழமை (06) குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றிய அதன் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் உரையில் இந்த விடயம் அம்பலமாகியிருக்கின்றது.

கணக்காய்வு பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேற்கொண்ட அரச நிறுவனங்கள் தொடர்பிலான 16 விசாரணைகளுக்கமைய பெறப்பட்ட தகவல்கள் சேர்க்கப்பட்ட குறித்த அறிக்கையில் உள்ள விடயங்களைப் பார்த்தபோது தாம் அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகவும் அவர் சபையில் நேற்று (06) கூறினார்.

உள்நாட்டு வருமான வரித்திணைக்களத்தின் “லெஜஸி” கட்டமைப்பிற்கமைய 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட நிறவனங்கள் குறித்து வருமான வரித்திணைக்களத்திற்கு பெறவேண்டிய நிலுவை வரிவருமானமாக 1800 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மீள அறவிடப்பட வேண்டிய வரிவருமானம் நாற்பத்திரண்டு கோடி ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உள்நாட்டு வருமான வரித்திணைக்களத்தின் “ரமிஸ்” கட்டமைப்பின்படி 2021ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதிவரை நிலுவை வரிவருமானமாக 8700 கோடி ரூபா இருக்கின்ற போதிலும் அந்த தொகையில் 400 கோடி ரூபாவே பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, நொரோச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு வரி விதிப்பதில் ஏற்பட்ட பிழையால் அரசுக்கு ரூ .130 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையை சமர்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறினார்.

 

Advertiesment